சம்பவம் செய்யும் கோடை மழை.. விவசாயிகளுக்கு நஷ்டம்!

70பார்த்தது
சம்பவம் செய்யும் கோடை மழை.. விவசாயிகளுக்கு நஷ்டம்!
தமிழகம் முழுவதும் கடந்த மே 4ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. கடந்த மாதம் வரை வெயில் கடும் உச்சத்தில் இருந்தது. இதனால் இளநீர், எலுமிச்சை, நுங்கு விலை உயர்ந்தது. இந்த நிலையில், சமீப நாட்களாக மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில், வெப்பம் தணிந்து, கோடை மழை கொட்டுகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோடை காலத்தில் தேவை அதிகரிப்பால் ஒரு மூட்டை எலுமிச்சம்பழம் ரூ.8,500 வரை விற்பனையானது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இன்று ரூ.3,000 வரை மட்டும் ஏலம் போகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி