நடிகை இறந்த சோகத்தில் நடிகர் தற்கொலை

53பார்த்தது
நடிகை இறந்த சோகத்தில் நடிகர் தற்கொலை
கன்னட தொலைக்காட்சியில் நடித்து வந்த பிரபல நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த 5 நாட்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். தெலுங்கு நடிகர் சந்திரகாந்த், பவித்ராவின் இழப்பால் கடந்த சில நாட்களாக சோகத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பவித்ராவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கிறது. ஆனால், முதல் திருமண உறவில் இருந்து பிரிந்து விட்டார். சந்திரகாந்தும் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்தனர்.