“100% உழைப்பை போட்டால் வெற்றி நிச்சயம்” - விஜய்

63பார்த்தது
“100% உழைப்பை போட்டால் வெற்றி நிச்சயம்” - விஜய்
சென்னையில் இன்று (ஜூன் 28) 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார். முன்னதாக மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், “எல்லா துறையுமே நல்ல துறைதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முழு ஈடுபாட்டோடு 100% உழைப்பை போட்டால் வெற்றி நிச்சயம். அதனால் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி