யு-20 ஆசிய தடகள சாம்
பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சுனில் குமார் டெகத்லானில் தங்கப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் யெச்சியோன் நகரில் ந
டைபெற்று வரும் இந்தத் தொடரில் 10 போட்டிகளை உள்ளடக்கிய டெகத்லானில் இன்று நடைபெற்ற
போட்டியில் 7003 புள்ளிகளை குவித்து இந்தியாவை சேர்ந்த சுனில் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இதனை தொடர்ந்து மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவை சேர்ந்த பூஜா 1.82 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும், மகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் புஷ்ரா கான் 9:41.47 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.