அண்ணனாக உங்களுக்கு என்றும் துணை நிற்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களிடையே உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “மாணவர்கள் நமது முதல்வரை உரிமையோடு அப்பா.. அப்பா.. என அழைக்கின்றனர். நமது முதல்வர் ஒரு தந்தையாக உங்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவார். நானும் உங்கள் வீட்டில் உள்ள அண்ணனாக உங்களுக்கு துணை நிற்பேன்" என்று கூறியுள்ளார்.