நடிகர் ரஜினிகாந்த் (73) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த நாளங்களில் அடைப்பு இருந்ததால் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 'ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்' என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.