#DoltForDravid: ராகுல் டிராவிட் அதிரடி கருத்து!

69பார்த்தது
#DoltForDravid: ராகுல் டிராவிட் அதிரடி கருத்து!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஓய்வு பெறும் ராகுல் டிராவிட்டிற்காக டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என #DoltForDravid வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், 'இவருக்காக இதை செய்ய வேண்டும்' என்ற விஷயத்தில் எனக்கு விருப்பம் இல்லை. வேறு ஒருவருக்காக ஒரு செயலை செய்வது என்னுடைய நம்பிக்கை, தன்மைக்கு எதிரானது என ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், “எவெரஸ்ட் சிகரத்தை ஏன் ஏற வேண்டும்? என்ற கேள்விக்கு, “எவெரஸ்ட் சிகரம் என்ற ஒரு விஷயம் உள்ளது. அதில் ஏறப் போகிறேன்.. அவ்வளவுதான்" என ஒருவர் சொன்னதாக கூறுவார்கள். அப்படித்தான் உலக கோப்பை என ஒன்று உள்ளது, அதை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். அவ்வளவுதான். வேறு யாருக்காகவும் கிடையாது" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி