அருவி படம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் நடிகை அதிதி பாலன். அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மற்ற மொழிகளில் நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், ”விஜய்யின் பீஸ்ட் படம் பார்க்க சென்று கால் மணி நேரத்தில் படம் போகிற போக்கு பிடிக்காமல் தியேட்டரில் தூங்கிவிட்டேன், நான் தூங்கியதை என் நண்பர்கள் வீடியோ எடுத்து கிண்டலடித்தனர்.” என்றார்.