சீமான் - பிரபாகரன் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்க் வாங்கியது நான்தான் என திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் காந்தி, "புகைப்படம் எடிட் ஆகி வந்த உடன் அந்த ஹார்ட் டிஸ்கை வாங்கி சீமானிடம் நான்தான் கொடுத்தேன். பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மைதான். ஆனால், பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் வெட்டி, ஒட்டியது" என்று கூறியுள்ளார்.