வயநாட்டில் மீண்டும் போட்டியிடுவது எனக்கு பெருமை!

84பார்த்தது
வயநாட்டில் மீண்டும் போட்டியிடுவது எனக்கு பெருமை!
வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதை எண்ணி பெருமைப் படுகிறேன் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கூறினார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், வயநாட்டில் உள்ள அனைவரும் எனக்கு அன்பையும் பாசத்தையும் கொடுத்துள்ளனர். சொந்த நபரைப் போல் நடத்தினார்கள். நான் உங்களை வாக்காளர்களாகக் கருதவில்லை. என் சகோதரி பிரியங்காவைப் பற்றி நான் எப்படி நினைக்கிறேனோ, அதே போலதான் உங்களையும் வைத்திருக்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்தி