தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எந்த ஒரு தேசியச் சின்னத்தையும் அவமானப்படுத்துவதோ, குறைத்து மதிப்பிடும் நோக்கமோ இல்லை. இந்திய ஒருமைப்பாட்டிலும், இறையாண்மையிலும், நாட்டின் வளர்ச்சியிலும் நாம் பெரும் மதிப்பு கொண்டிருக்கக் கூடியவர்கள்” என்றார்.