ஹைட்ரோகார்பன் திட்டம் - தமிழக அரசு விளக்கம்

52பார்த்தது
ஹைட்ரோகார்பன் திட்டம் - தமிழக அரசு விளக்கம்
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், கடந்த 2020 ஆம் ஆண்டு இயற்றிய, வேளாண் மண்டலங்கள் மேம்பாட்டுச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ காா்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.