நாமக்கல்: சுரேந்திரன் (28) என்பவருக்கும் சினேகா (24) என்ற பெண்ணுக்கும் 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டு சினேகா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சுரேந்திரன் இன்று (டிச. 15) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோரும் உயிரை மாய்த்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.