முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் மூட்டு வலி சிக்கல்கள் தற்போது இளம் வயதினருக்கும் ஏற்படுகிறது. இதை தடுக்க உங்களை எப்போதும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டியது முக்கியம். ஏனெனில் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்திருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும். அதே போல உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பது அவசியம். வழக்கமான உடற்பயிற்சி செய்து உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிப்பது சிறந்தது.