மாட்டின் இறைச்சியில் இருந்து கொழுப்பு அதிகம் உள்ள திசுக்களை வெட்டி எடுத்து அதை அதிக கொதி நிலையில் உள்ள நீரில் கொதிக்கவிட்டு அதன் கசடுகளை நீக்கி சுத்தப்படுத்துவதன் மூலம் மெல்லிசான வெண்ணெய் போன்ற பதத்தில் மாட்டு இறைச்சி கொழுப்பு தயாரிக்கப்படுகிறது. மாட்டின் சிறுநீரகத்தை சுற்றியுள்ள இறைச்சியில் அதிக கொழுப்புத தன்மை உள்ளதால் அதிலிருந்து பெரும்பாலும் இந்த கொழுப்பு பெறப்படுகிறது. இது மனிதர்கள் உட்கொள்வதற்கு தகுந்த கொழுப்பாகும்.