ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் சாப்பிட்டால் அதற்கு பணம் கொடுத்து வருவது வழக்கம். ஆனால், ஒரு உணவகத்தில் பிரியாணியை வெளுத்துக்கட்டிய கும்பல் ஒன்று சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஊழியரை தாக்கியுள்ளது. மேலும், அந்த பிரியாணி கடையையும் சூறையாடியது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என தெரியவில்லை அங்குள்ள மக்களைப் பார்க்கும்போது இது பாகிஸ்தானில் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.