பார்முலா 4 கார் ரேஸ் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

60பார்த்தது
பார்முலா 4 கார் ரேஸ் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில், பந்தயத்திற்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும், அரசு அளித்த ரூ.42 கோடியை திரும்ப அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பந்தயத்தை சென்னை மாநகருக்குள் நடத்த தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த மனுவில், கார் பந்தயத்திற்காக தமிழக அரசு ரூ.40 கோடியை செலவு செய்திருப்பது தவறு என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிபந்தனைகளுடன் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜுன் மாத்திற்கு பிறகு கார் ரேஸ் நடத்தப்படும் என ஏற்கனவே தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்தி