மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, ராணிப்பேட்டை, தூத்துக்குடி, பெரம்பலூர் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. சென்னையில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த திடீர் கனமழை வெப்பத்தை தணித்துள்ளது. இதையடுத்து, குளிர்ச்சி சூழல் நிலவுவதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.