தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்

78பார்த்தது
தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய ஆய்வுமையம் தற்போது திரும்பப் பெற்றுள்ளது. ஆனால், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் வெப்ப அலைக்கான எச்சரிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி