நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் உடல் சடலமாக மீட்பு

15683பார்த்தது
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் உடல் சடலமாக மீட்பு
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மாயமான நிலையில் அவரது உடல் அவரது தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார் தனசிங்கின் உடலை பாதி எரிந்த நிலையில் உவரி அருகே போலீசார் மீட்டனர். முன்னதாக கடந்த மாதம் 30ஆம் தேதி ஜெயக்குமார், சொத்து விவகாரம் தொடர்பாக தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுவதாகவும், அவர்கள் வீட்டை சுற்றி வருவதாக தெரிவித்து சிலரது பெயர்களை குறிப்பிட்டு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அக்கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை வீட்டை விட்டு சென்ற அவர் வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில், வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தற்போது அவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி