இந்தியாவில் வாக்களித்த முதல் இலங்கை தமிழர்

78பார்த்தது
இந்தியாவில் வாக்களித்த முதல் இலங்கை தமிழர்
திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்ற இவர், இந்தியாவில் வாக்களித்த முதல் இலங்கை தமிழர் ஆவார்.

தொடர்புடைய செய்தி