தமிழ்மாநில காங்கிரஸ் தூத்துக்குடி வேட்பாளர் இவர்தான்

61பார்த்தது
தமிழ்மாநில காங்கிரஸ் தூத்துக்குடி வேட்பாளர் இவர்தான்
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு பாஜக கூட்டணியில் ஈரோடு, தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஈரோடு தொகுதியில் விஜயகுமார் சேகரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபாலும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் விஜயசீலன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி எம்.பியை எதிர்த்து அவர் போட்டியிடவுள்ளார்.

தொடர்புடைய செய்தி