இளையராஜாவுக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

77பார்த்தது
இளையராஜாவுக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவில், “ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தம் இன்னிசையால் நம்மை ஆட்கொண்டிருக்கும், இசைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்து, அவர்தம் இசையே. அவர் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, தேசங்கள் கடந்து, பல தலைமுறைகளையும் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி