எப்பவும் நீ ராஜா! ’இசைஞானி’ இளையராஜா பிறந்தநாள் இன்று

74பார்த்தது
எப்பவும் நீ ராஜா! ’இசைஞானி’ இளையராஜா பிறந்தநாள் இன்று
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் இன்று (ஜூன் 2). ஒப்பற்ற இசை மேதை பற்றியும் இசைத் துறையில் அவர் நிகழ்த்திய பிரமிக்கத்தக்க சாதனைகளைக் குறித்தும் பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. இன்னும் பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்படக் காத்திருக்கின்றன. ஞானதேசிகன் என்ற இயற்பெயர் கொண்டவருக்கு பள்ளியில் சேர்க்கும் போது ராசய்யா என பெயர் மாற்றினார் தந்தை. பின்பு இசை கற்க சென்ற தன்ராஜ் மாஸ்டர் ராஜா என்று திருத்த, இளையராஜாவை 'அன்னக்கிளி' படம் மூலம் அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் 'இளைய'ராஜா என்று மாற்றினார்.