ஒடிசா ரயில் விபத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

78பார்த்தது
ஒடிசா ரயில் விபத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
ஒடிசாவின் பாலசூர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதிய கோர விபத்து நடந்து இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. கடந்த ஆண்டு ஜுன் 2ஆம் தேதி நாட்டையே உலுக்கிய அதி பயங்கர ரயில் விபத்து நடந்தது. இதில், மொத்தம் 296 பேர் உயிரிழந்தனர். 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

கோரமண்டல் விரைவு ரயிலின் தடம் புரண்ட 3 பெட்டிகள், பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரயிலின் கடைசி 2 பெட்டிகள் மீது மோதின. இதன் காரணமாக, இந்த 5 பெட்டிகளில் பயணித்தவர்கள் பெருமளவில் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி