டிச., 14 ஆம் தேதி நடைபெற்ற அரசு உதவி வழக்கறிஞர் கணினி வழி தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 4,186 பேர் தேர்வு எழுதிய நிலையில், சில மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வை முழுமையாக எழுத முடியாத தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று கணினி வழி தேர்வை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.