அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரன், 'சார்' ஒருவருடன் தனியாக இருக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டியிருக்கிறார். இது போலீசில் மாணவி அளித்த வாக்குமூலம் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.