வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இருந்தபோதிலும் வருகிற 30, 31ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. அதனைத் தொடர்ந்து, பிப்.1ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.