பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தில் உள்ள கர்காவின் நாராயண்பூர் கிராமத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு நுழைந்த இளம் பெண் ஒருவர் மணமேடையில் ஏறி மணமகனிடம் 'நான் இருக்கும்போது நீ எப்படி இன்னொரு திருமணம் செய்யலாம்' என கேள்வி எழுப்பினார். பின்னர் அப்பெண்ணை மணமேடையில் இருந்து இறக்கி விசாரித்ததில் இருவரும் காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார். இருந்தாலும் அப்பெண்ணை அங்கிருந்து விரட்டிவிட்டு திருமணத்தை நடத்தினர்.