உலகமெங்கும் உள்ள தமிழர்கள் இன்று (ஜன., 14) தைத்திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து படைத்து வழிபாடு செய்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும், வீட்டின் முன்புறம் கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி, புது மண்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து, வீட்டில் குலதெய்வம், முன்னோர்களுக்கு படைத்து வழிபாடு செய்கின்றனர். உற்றார், உறவினர்களுக்கு இனிப்புகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.