அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பாலிசேட் பகுதியில் ஏற்பட்ட அதி பயங்கர காட்டுத்தீயில் சிக்கி பல கோடி மதிப்புள்ள வீடுகள், நிறுவனங்கள் எதிர்ந்து நாசமாகின. கோர தாண்டம் ஆடிய இந்த பேரிடரில் சிக்கி 24 பேர் பலியாகியுள்ளனர். பலகோடி சேதத்தை ஏற்படுத்திய தீ, ஒரு வாரமாகியும் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. பலத்த காற்று வீசி வருவதால் தீ அணைப்பதில் வீரர்கள் சவாலை சந்தித்து வருகின்றனர். உலகம் பார்த்திராத ஒரு பயங்கர பேரழிவை அமெரிக்கா சந்தித்துள்ளது.