துபாயில் நடந்த 24எச் கார் பந்தயத்தில் 991 பிரிவில் நடிகர் அஜித்தின் 'அஜித்குமார் ரேசிங்' அணி 3வது இடம் பிடித்து அசத்தியது, இதையடுத்து அஜித்துக்கு திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து மழை பொழிகின்றனர். நடிகர் சூர்யாவின் வாழ்த்து செய்தியில், “நம்பிக்கை, தீராத ஆர்வம், இடைவிடாத முயற்சியால் வெற்றி பிறக்கிறது" என சொன்ன ஸ்டீபன் கரியின் (கூடைப்பந்து வீரர்) கூற்று உண்மையானது" என குறிப்பிட்டார்.