சிறுமி பலாத்காரம்.. நண்பன் உட்பட 10 பேர் கைது!

577பார்த்தது
சிறுமி பலாத்காரம்.. நண்பன் உட்பட 10 பேர் கைது!
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோட்டல் அறையில் ஐந்து நாட்களாக சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். விசாகப்பட்டினத்தில் ஒரு வீட்டில் பணிபுரியும் 17 வயது சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற காதலன், சிறுமியை முதலில் பலாத்காரம் செய்தார். பின்னர், காதலன் தனது மற்றாரு நண்பனை ஹோட்டலுக்கு அழைத்து இருவரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அங்கிருந்து தப்பிய சிறுமி கடற்கரைக்கு சென்று தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

தொடர்ந்து, அங்கு தனியாக நிற்பதைக் கவனித்த ஒரு புகைப்படக் கலைஞர், இது குறித்து விசாரித்து, சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவரும் அவரது ஏழு நண்பர்களும் சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்தனர். சிறுமி அங்கிருந்து தப்பி ஒடிசா சென்றுள்ளார். சிறுமி காணாமல் போனதையடுத்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து சிறுமி ஒடிசாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி விசாகப்பட்டினம் அழைத்து வரப்பட்ட நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீசாரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.