கேரளாவில் இருந்து வந்த கழிவுகள்: மடக்கிப் பிடித்த அதிகாரிகள்

81பார்த்தது
கேரளாவில் வீணாகும் இறைச்சி கழிவுகளை கேரள தமிழக எல்லையான கன்னியாகுமரியில் வந்து கொட்டுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிகழ்வு தொடர்கதை ஆகி வரும் நிலையில், இன்றும் மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கண்டைனர் ஒன்று கன்னியாகுமரி பகுதிக்கு வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அதிகாரிகள், கண்டைனரை மடக்கிப் பிடித்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, கண்டெய்னரை கேரளாவிற்கே திருப்பி அனுப்பினர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி