பள்ளி மாணவர்களுக்குள் கேங் வார்.. பதறவைக்கும் வீடியோ

54பார்த்தது
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குள் உணவு இடைவேளையின்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டு, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி சண்டை போட்டதால் பள்ளி வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. இது போன்ற சம்பவம் அடிக்கடி நிகழ்வதால், காலை, மாலை நேரங்களில் ஆசிரியர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி தந்தி டிவி

தொடர்புடைய செய்தி