வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட தயிரில் பூஞ்சை

540பார்த்தது
வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட தயிரில் பூஞ்சை
கடந்த சில நாட்களாக வந்தே பாரத் விரைவு ரயில்களில் வழங்கப்படும் உணவு குறித்து பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், ஹர்ஷத் டோப்கர் என்ற நபர் டேராடூனில் இருந்து டெல்லியில் உள்ள ஆனந்த் விஹாருக்கு வந்தே பாரத் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்தார். அப்போது அவர் ரயில் உணவின் ஒரு பகுதியாக பரிமாறப்பட்ட தயிரில் பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அதன் புகைப்படங்களை எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, அது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி