சேலம் மேற்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தவர் ஏ.வி.ராஜு. இவர் சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்கள் தமிழ் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தனர் எனவும், நடிகர் கருணாஸ்தான் அதற்கு ஏற்பாடு செய்துகொடுத்தார் என கூறியிருந்தார். இந்நிலையில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி பொது வெளியில் நடிகைகளின் பெயரை சொல்லி அவதூறு பரப்பிய ஏ.வி. ராஜு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.