ப்யூரின் அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த இந்த பழவகைகளை உட்கொள்ளலாம். அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, யூரிக் அமில அளவை குறைக்க இது உதவும். எலுமிச்சையில் உள்ள தனிமங்கள் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை கலந்து குடிக்கலாம். ஆரஞ்சு பழத்தில் உள்ள பண்புகள் யூரிக் அமிலத்தை குறைக்க உதவும். திராட்சை ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தை குறைக்க உதவும்.