ஆடி மாதத்தில், மூத்த குடிமக்களை அம்மன் கோவில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை, தஞ்சை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை மண்டலங்களைத் தலைமையிடமாகக் கொண்டு 1,000 மூத்த குடிமக்கள் அம்மன் கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஜுலை 19,26, ஆகஸ்ட் 2, 9 ஆகிய நாட்களில் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று வருகிற 17ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்.