6.18 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த 3 மாதங்களுக்குள் இந்த திட்டம் முழுவதுமாக நிறைவேற்றப்படும் என்றும், 6.18 லட்சம் சைக்கிள்களுக்கான விலையை இறுதி செய்யும் பணி தற்போது நடந்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.