மாவட்ட மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (DISHA) மீதான குழுவின் நான்காவது மாநில அளவிலான மறு ஆய்வுக் கூட்டம் ஆனது செயலகத்தில் நடத்தப் பட்டது. MGNREGA திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய 2,118 கோடி ரூபாய் ஊதிய நிலுவைத் தொகையினை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசானது 59 நாட்கள் பணி வேலைகளை வழங்கியது என்ற ஒரு நிலையில் இது தேசியச் சராசரியான 52 நாட்களை விட அதிகமாகும்.