ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடியில் அமைய உள்ள டாடாவின் ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு இன்று (செப்., 28) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த கார் உற்பத்தி தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.