பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமரின் மகனுமான எச்.டி. ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு பத்நாப நகரில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டில் வைத்து ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். தேவகவுடாவின் பேரனும், ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அது தொடர்பான 3000 வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக போலீஸ் விசாரித்து வருகிறது. இதுவரை 3 பெண்கள் அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.