பாஜகவில் இணையும் முன்னாள் முதலமைச்சர்

73பார்த்தது
பாஜகவில் இணையும் முன்னாள் முதலமைச்சர்
காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று ராஜினாமா செய்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான அசோக் சவான், இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளார். இன்று பாஜக அலுவலகம் சென்று கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து புதிய அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாகவும், மகாராஷ்டிராவின் நேர்மறையான வளர்ச்சிக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்தார். அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த அசோக் சவான், டிசம்பர் 2008 முதல் நவம்பர் 2010 வரை முதலமைச்சராகப் பணியாற்றியவர், மகாராஷ்டிர காங்கிரஸில் முக்கிய தலைவராக இருந்தார்.

தொடர்புடைய செய்தி