காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை‍

78பார்த்தது
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை‍
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்து விட வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவுறுத்தியுள்ளார். தொடர் கனமழை காரணமாக ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி