திரைப்பட இயக்குநர் பிஜு வட்டப்பாரா காலமானார்

78பார்த்தது
திரைப்பட இயக்குநர் பிஜு வட்டப்பாரா காலமானார்
திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான பிஜு வட்டப்பாரா (54) இன்று (மே 14) திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். வழக்கின் நிமித்தமாக மூவாற்றுபுழாவில் வழக்கறிஞரை பார்க்க சென்றபோது மயங்கி விழுந்த பிஜு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சுரேஷ் கோபி நடித்த 'ராமராவணன்' மற்றும் அவரது 'சொந்தம் பார்யா ஜிந்தாபாத்' போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

அதே போல் மறைந்த நடிகர் கலாபவன் மணி நடித்த 'லோகநாதன் ஐஏஎஸ்' மற்றும் 'களபம்' படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். அவரது உடல் மூவாற்றுபுழா தாலுகா மருத்துவமனையில் உள்ளது. மருத்துவமனை சான்றழித்த பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். பிஜு மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி