அமெரிக்கா: 20 வயது பெண் பாடிபில்டர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓஹியோவின் கொலம்பஸில் நடந்த அர்னால்ட் விளையாட்டு விழாவில் கலந்துகொள்ள ஜோடி வான்ஸ் தயாராகி வந்தார். இந்நிலையில், ஜோடி வான்ஸ் தனது மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, வான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடுமையான நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இதயம் செயலிழந்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.