ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது: நடப்பது பாசிச ஆட்சியா? - சீமான் காட்டம்

56பார்த்தது
ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது: நடப்பது பாசிச ஆட்சியா? - சீமான் காட்டம்
ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் நடப்பது மக்களாட்சியா? பாசிச ஆட்சியா? எனவும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 'ரெட் பிக்ஸ்' ஊடகத்தின் நிறுவனரும், ஊடகவியலாளருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்திருக்கும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல! பங்கேற்பாளரின் கருத்துக்கு நெறியாளரையும் சேர்த்துக் கைது செய்யும் இச்செயல்பாடு ஊடகச்சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயலாகும்.

2006 - 2011ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடத்திய கொடுங்கோல் ஆட்சிக்குப் பின்னர், பத்தாண்டு காலம் அதிகாரத்தை இழந்து நின்றது மறந்துபோனதா? அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும் எத்தனைக் காலத்துக்கு ஆட்டம்போடுவீர்கள் பெருமக்களே? பெரும் சாம்ராஜ்ஜியங்களும், பேரரசுகளுமே வீழ்த்தப்பட்டிருக்கின்றன என சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி