தேமுதிகவினரால் விமான நிலையத்தில் வாகன நெரிசல்

80பார்த்தது
தேமுதிகவினரால் விமான நிலையத்தில் வாகன நெரிசல்
கேப்டன் விஜயகாந்திற்கு டெல்லியில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இதனைப் பெற்று வந்த பிரேமலதாவை வரவேற்க இன்று சென்னை விமான நிலையத்தில் தொண்டர்கள் கூடினர். தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் வாகனப் பேரணியாக செல்ல முயன்றனர். இதனைக் கண்ட காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது, தொண்டர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது தள்ளுமுள்ளாக மாறியது. தொடர்ந்து, அவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.