தாய்லாந்தில் விவசாயி ஒருவர் தான் வளர்த்து வந்த முதலைகளைக் கொன்றுள்ளார். யாகி புயலின் போது முதலைகளை வளர்த்து கட்டிடம் இடிந்து விழுந்ததால், அவை வெளியே வந்து மக்களை தாக்குவதை தடுக்க விவசாயி இப்படி செய்துள்ளார். 13 அடி நீளம் கொண்ட 'Crocodile X' இனத்தைச் சேர்ந்த சுமார் 125 முதலைகளை நதாபக் கும்காட் (37) என்பவர் வளர்த்து வந்தார். செப்., 22 அன்று, புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழையால் தாய்லாந்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்தனர்.